பொல்லார்ட் 70 பந்தில் 102 ரன்: வெஸ்ட்இண்டீஸ் 42 ரன்னில் வெற்றி- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது

width="200"



ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செயிண்ட் லுசிகாவில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன் குவித்தது.

பொல்லார்ட் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 70 பந்தில் 102 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரியும், 8 சிக்சரும் அடங்கும். ரஸ்சல் 34 ரன்னும், கேப்டன் டாரன் சேமி 31 ரன்னும் எடுத்தனர். பெர்ட்லீ, வாட்சன், டோகர்ட்டி தலா 2 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 46.3 ஓவரில் 252 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 42 ரன்னில் வெற்றி பெற்றது. பெர்ட்லீ அதிகபட்சமாக 48 பந்தில் 59 ரன்னும் (5 சிக்சர், 5 பவுண்டரி), டேவிட் ஹஸ்சி 57 ரன்னும் எடுத்தனர்.

கேமர் ரோச், பிராவோ, டாரன்சேமி, ரஸ்சல் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் வெஸ்ட்இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 64 ரன்னிலும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

3-வது ஆட்டம் டை ஆனது. இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (25-ந்தேதி) நடக்கிறது.




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India