இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து போராட்டம்

width="200"


 
இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டு  டெஸ்ட் போட்டி கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று முன் தினம் கொழும்புவில் தொடங்கியது.
 
டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஜெயவர்த்தனே பேட்டிங் தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 318 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் கேப்டன்  ஜெயவர்த்தனே அதிகபட்சமாக 180 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இலங்கை அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இங்கிலாந்து அணியில் பெல் அதிக பட்சமாக 52 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் ஹெரத் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்திருந்தது. இன்று மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கியது. 5 விக்கெட்டுகள் இழந்த நிலையில் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை ஆடிய இலங்கை 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
 
7-வது விக்கெட்டிற்கு களமிறங்கிய விக்கெட் கீப்பரான ஜெயவர்தனே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் ஸ்வான் 6 விக்கெட்டுகளையும் மோன்டி பனேசர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் 339 ரன்கள் முன்னிலை பெற்றது இலங்கை அணி.
 
இதனையடுத்து 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. இந்த அணியின் கேப்டன் ஸ்டிராஸ் 14 ரன்களிலும், அலைஸ்டர் குக் 14 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
 
ஜோன்னதன் டிராட் 40 ரன்களுடனும் கெவின் பீட்டர்சன் 29 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 229 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று விடும். இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதமிருக்கிறது.
 
சுழல் வீச்சிற்க்கு சாதமான ஆடுகளம் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை சரியாக கணிக்க இயலவில்லை என்றே சொல்லலாம்.      




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India